திருவள்ளூர் அருகே கத்திமுனையில் வாலிபருக்கு மிரட்டல் - 2 பேர் மீது வழக்கு


திருவள்ளூர் அருகே கத்திமுனையில் வாலிபருக்கு மிரட்டல் - 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 16 Jun 2021 9:10 AM IST (Updated: 16 Jun 2021 9:10 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே கத்திமுனையில் வாலிபருக்கு கொலை செய்து விடுவதாக மிரட்டிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கோலப்பஞ்சேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகன் ராகேஷ் கண்ணன் (வயது 23). நேற்று முன்தினம் ராஜேஷ் கண்ணன் தன்னுடைய வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஜனா, அவரது நண்பர் சதீஷ் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அவரை கத்திமுனையில் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.

இதுகுறித்து ராகேஷ் கண்ணன் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக ஜனா, சதீஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story