மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தகராறு; வாலிபருக்கு வெட்டு


மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தகராறு; வாலிபருக்கு வெட்டு
x
தினத்தந்தி 16 Jun 2021 9:40 AM IST (Updated: 16 Jun 2021 9:40 AM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய தகராறில் வாலிபரை கத்தியால் வெட்டிய 4 பேரை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மீஞ்சூர்,

மீஞ்சூரை அடுத்த வழுதிகைமேடு கிராமம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அருள். இவரது மகன் சிவப்பிரகாசம் (வயது21). இவர் தன்னுடைய வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் (21) மோட்டார் சைக்கிளில் வந்து சிவப்பிரகாசம் மீது மோதி மிரட்டல் விடுத்தார். இது குறித்து கேட்டதற்கு சஞ்சய், உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கூறிவிட்டு 3 பேருடன் வந்து தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் வெட்டியுள்ளார். சிவப்பிரகாசத்தின் தாய் மற்றும் 3 பேரையும் தாக்கியுள்ளனர்.

அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அவர்கள் 4 பேரும் தப்பி ஒடி விட்டனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story