கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சை செய்த தி.மு.க., எம்.பி.
திருவொற்றியூர் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நிபுணரான வட சென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டவருக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.
திருவொற்றியூர்,
சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 8 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த ஆஸ்பத்திரிக்கு அறுவை சிகிச்சை நிபுணரான வட சென்னை எம்.பி. டாக்டர் கலாநிதி வீராசாமி நேரில் சென்று நோயாளிகளை பார்வையிட்டார்.
அப்போது, கண்ணில் பூஞ்சை பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதான நோயாளிக்கு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செல்வராஜ்குமார் முன்னிலையில் கவச உடை அணிந்து அவர் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை வெற்றிக்கரமாக முடிவடைந்தது. பின்னர் கலாநிதி வீராசாமி நிருபர்களிடம் பேசும்போது, கருப்பு பூஞ்சை நோய் என்பது எதிர்ப்பு சக்தி குறைபாடுகள் உள்ள அனைவருக்குமே ஏற்படும் ஒரு நோய் ஆகும். இதுவரை இந்த நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் நோய் போன்று கருப்பு பூஞ்சை நோய் ஒருவருக்கு ஏற்பட்டால் உயிரிழப்பை ஏற்படுத்தாது என கூறினார்.
Related Tags :
Next Story