ஆத்தூரில் மது விற்ற அண்ணன் தம்பி கைது


ஆத்தூரில் மது விற்ற அண்ணன் தம்பி கைது
x
தினத்தந்தி 16 Jun 2021 6:17 PM IST (Updated: 16 Jun 2021 6:17 PM IST)
t-max-icont-min-icon

ஆத்தூரில் மது விற்ற அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.

ஆறுமுகனேரி:
ஆத்தூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் தலைவன்வடலி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது தலைவன்வடலி அருகே உள்ள ஒரு பாலத்தில் 2 பேர் சட்டவிரோதமாக மது விற்றது தெரிய வந்தது. அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், தலைவன்வடலியை சேர்ந்த சித்திரை வேல் மகன்கள் காளிமுத்து, மாரிமுத்து என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.300 மற்றும் 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த ேபாலீசார், அந்த 2பேரையும் கைது செய்தனர்.

Next Story