வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு


வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 16 Jun 2021 6:41 PM IST (Updated: 16 Jun 2021 6:41 PM IST)
t-max-icont-min-icon

வீட்டில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு

அரக்கோணம்

அரக்கோணம் கணேஷ்நகர் 10-வது தெருவை சேர்ந்தவர் எத்திராஜின் மனைவி சுசிலா (வயது 68). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை திறந்து வைத்து ஹாலில் படுத்துத் தூங்கி கொண்டிருந்தார். 
நேற்று அதிகாலை அவரின் வீட்டுக்கதவு திறந்து கிடந்ததைக் கண்ட மர்ம நபர் யாரோ வீட்டுக்குள் நுழைந்து தூங்கி கொண்டிருந்த மூதாட்டி சுசிலா அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துச் சென்று விட்டார்.

திடுக்கிட்டு எழுந்த சுசிலா கழுத்தில் சங்கிலியை காணாதது கண்டு சத்தம் போட்டு அழுதுள்ளார். அங்கிருந்தவர்கள் வந்து விவரத்தைக் கேட்டு விசாரித்தனர். பின்னர் இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசில் சுசிலா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story