அமிர்தி பூங்காவில் விலங்குகளின் உடல்நலம் குறித்து பரிசோதனை
அமிர்தி பூங்காவில் விலங்குகளின் உடல்நலம் குறித்து பரிசோதனை
வேலூர்
சென்னை வண்டலூர் பூங்காவில் கொரோனா பாதிக்கப்பட்ட 2 சிங்கங்கள் உயிரிழந்தன. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து உயிரின பூங்காக்களில் உள்ள விலங்குகளின் உடல்நலம் குறித்து பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து வேலூர் அருகே உள்ள அமிர்தி சிறுவன உயிரின பூங்காவில் விலங்குகளின் உடல்நலம் குறித்து ஜமுனாமரத்தூர் அரசு கால்நடை மருத்துவர் வரதராஜன் பரிசோதனை மேற்கொண்டார். முதலை, மான், பறவை இனங்கள் போன்றவை சோர்வாக உள்ளதா, மூச்சுப்பிரச்சினை உள்ளதா? என டாக்டர் பரிசோதனை செய்தார்.
இந்த சோதனை வழக்கமாக நடைபெறும் சோதனை எனவும், கொரோனா பரிசோதனை அல்ல என்றும் மாவட்ட வன அலுவலர் பார்கவ்தேஜா தெரிவித்தார்.
Related Tags :
Next Story