பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2021 8:07 PM IST (Updated: 17 Jun 2021 5:40 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பழனியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி:
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பழனி பஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் நூருல்ஹூதா தலைமை தாங்கினார். நகர பொருளாளர் வெள்ளியங்கிரி, மாவட்ட துணை செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
ஆர்ப்பாட்டத்தின்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பிற பொருட்களின் விலையும் உச்சத்தை அடைந்துள்ளது. எனவே பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 
இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். 

Next Story