வத்தலக்குண்டு அருகே கிணற்றில் மூழ்கி மாணவர் பலி
வத்தலக்குண்டு அருகே கிணற்றில் மூழ்கி மாணவர் பலியானார்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு கன்னிமார் கோவில் தெருவை சேர்ந்தவர் நெஸ்புரூஸ். அவருடைய மகன் சதீஷ் (வயது 18). பிளஸ்-2 முடித்த இவர், கல்லூரியில் சேருவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். நேற்று மதியம் சதீஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து கட்டகாமன்பட்டி அருகே உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் குளிக்க சென்றார்.
அங்கு நண்பர்கள் குளித்துக்கொண்டிருந்த போது சதீஷ் மட்டும் எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கினார். உடனே இதுகுறித்து அவரது நண்பர்கள் வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், தீயணைப்பு படைவீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, தண்ணீரில் மூழ்கி பலியான நிலையில் சதீசின் உடல் கிணற்றில் மிதந்தது.
இதையடுத்து தீயணைப்பு படைவீரர்கள், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story