கோவில்பட்டியில் குடிநீர் சப்ளை அறையை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் குடிநீர் சப்ளை அறையை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து  பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2021 9:20 PM IST (Updated: 16 Jun 2021 9:20 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் குடிநீர் சப்ளை அறையை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி:-
கோவில்பட்டியில் குடிநீர் சப்ளை அறையை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குடிநீர் சப்ளை அறையை...
கோவில்பட்டி 14-வது வார்டு முத்தையா அம்மாள் தெருவில் கடந்த 2007-ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் மேல்நிலை தொட்டியுடன் மோட்டார் அறை அமைத்து பொது மக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யப் பட்டு வந்தது.
நகரசபை நிர்வாகம் கடந்த 12-ந் தேதி மோட்டார் அறையில் மின்சார த்தை துண்டித்து சென்றதால், குடிநீர் சப்ளை இல்லாமல் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர். இதை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் மோட்டார் அறையை அப்புறப்படுத்த நகரசபை அதிகாரிகள் வந்த போது அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினார்கள்.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில், நேற்று மோட்டார் அறையை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும், நகரசபை நிர்வாகம் மோட்டார் அறைக்கு மின் இணைப்பு கொடுத்து தண்ணீர் சப்ளை செய்யக் கோரியும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நகரசபை கவுன்சிலர்கள் பத்மாவதி, ராமசுப்பு தலைமை தாங்கினர். இதில் அ.தி.மு.க. வார்டு செயலாளர் கனக சுந்தரம், தி.மு.க. வார்டு செயலாளர் ஏமராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களிடம் கிழக்கு போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினா். இதனை தொடர்ந்து நகரசபை ஆணையாளர் ராஜாராம், உதவி கலெக்டர் சங்கர நாராயணன் ஆகியோரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Next Story