கோவிலபட்டி பாரில் பதுக்கிய 270 மதுபாட்டில்கள் பறிமுதல்
கோவில்பட்டியில் மதுபாரில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 270 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் மதுபாரில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 270 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவான பார் உரிமையாளரை போலீசார் தேடிவருகின்றனர்.
பாரில் பதுக்கல்
கோவில்பட்டி - எட்டயபுரம் சாலையில் உள்ள மது பாரில்(மதுபானக்கூடம்) இரவு சட்ட விரோதமாக மது பாட்டில் களை பதுக்கி, விற்பனைக்கு வைத்திருப்பதாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்து. அதை யடுத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பரமசிவம் தலைமையில் போலீசார் கோவில்பட்டி - எட்டயபுரம் ரோடு மூக்கரை விநாயகர் கோயில் சந்திப்பு அருகே உள்ள மதுபானக் கூடத்தை ஆய்வு செய்த போது, அங்கு விற்பனைக் காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
பார் உரிமையாளருக்கு வலைவீச்சு
இதையடுத்து அங்கிருந்த 270 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்குப் பதிந்து பார் உரிமை பெற்ற அன்புராஜை தேடி வருகின்றனர்.
மேலும், கொப்பம் பட்டி ஊரணி அருகே சட்ட விரோதமாக மது விற்பனை நடை பெறுவதாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
வாலிபர் கைது
இதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். ஊரணி அருகே இலந்தப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் அழகு ராஜ் (வயது 22) என்பவர் 15 மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தார். அந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story