மோட்டார் சைக்கிள் திருட்டில் 3 பேர் கைது


மோட்டார் சைக்கிள் திருட்டில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 16 Jun 2021 9:25 PM IST (Updated: 16 Jun 2021 9:25 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் திருட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம், 
பெரியபட்டினம் அருகே உள்ள மேலவலசை பகுதியை சேர்ந்தவர் திருவாசகம் (வயது46). இவருடைய மோட்டார் சைக்கிளில் காணாமல் போய்விட்டது. இந்நிலையில் அவர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்றுள்ளனர். அதில் ஒரு மோட்டார் சைக்கிள் தன்னுடையது என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த திருவாசகம் அவர்களை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது திருப்புல்லாணி போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்ததன் அடிப் படையில் போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் மடக்கி பிடித்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் சிக்கல் அருகே உள்ள களநீர் மங்கலம் பகுதியை சேர்ந்த சித்திரைவேல் மகன் சண்முகசுந்தரம் (39), உச்சிப்புளி என்மனங்கொண்டான் முருகேசன் மகன் ஜீவானந்தம் (23), மற்றும்  16 வயது சிறுவன் ஆகியோர் என்பது தெரிந்தது. இவர்கள் மோட்டார் சைக்கிளை திருடி விற்பனை செய்து பணத்தை பங்கு போட்டு கொள்ள திட்டமிட்டு சென்று கொண்டிருந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து சண்முகசுந்தரம், ஜீவானந்தம் ஆகியோரை கைது செய்த போலீசார் சிறுவனை சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Next Story