வாலிபரை தாக்கி பணம் பறிப்பு


வாலிபரை தாக்கி பணம் பறிப்பு
x
தினத்தந்தி 16 Jun 2021 9:31 PM IST (Updated: 16 Jun 2021 9:31 PM IST)
t-max-icont-min-icon

வாலிபரை தாக்கி பணம் பறித்தவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் வள்ளல்பாரி தெற்குத்தெருவை சேர்ந்தவர்  விஜயமாட சாமி (வயது32). கைவினை தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். வசந்தநகர் பகுதியில் வந்தபோது 2 பேர் வழிமறித்து தாக்கி விஜயமாடசாமி வைத்திருந்த ரூ.30 ஆயிரம் பறித்து சென்றுவிட்டார்களாம். படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வசந்தநகர் முருகேசன் மகன் காமாட்சி (25) மற்றும் வின்சென்ட் ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.

Next Story