கோவில்பட்டியில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை


கோவில்பட்டியில் கட்டிட தொழிலாளி  தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 16 Jun 2021 9:35 PM IST (Updated: 16 Jun 2021 9:35 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி சுப்பிரமணிய புரம் 3-வது தெருவை சேர்ந்த பொன்னுசாமி மகன் ராஜேந்திரன் (வயது 37). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி 6 மாதத்திற்கு முன்பு பிரிந்து சென்று விட்டாராம்.
இதனால் விரக்தி அடைந்த ராஜேந்திரன் வாழ்க்கையில் வெறுப் படைந்து நேற்று மாலையில் வீட்டுக்கு பின்புறம் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்ததும் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்- இன்ஸ்பெக்டர் மாதவராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story