உடுமலையில் உள்ள பள்ளிகளுக்கு இலவச பாடப்புத்தகங்களை பிரித்து அனுப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
உடுமலையில் உள்ள பள்ளிகளுக்கு இலவச பாடப்புத்தகங்களை பிரித்து அனுப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
உடுமலை
உடுமலையில் உள்ள பள்ளிகளுக்கு இலவச பாடப்புத்தகங்களை பிரித்து அனுப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பள்ளிகள்
உடுமலை நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு, மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 118 பள்ளிகள் உள்ளன.
இந்த பள்ளிகளில் 2021-2022-ம் கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல், 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு தொடக்க கல்வித்துறையின் மூலம் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
பாடப்புத்தகங்கள்
இதற்காக 7 ஆயிரத்து 658 பாடப்புத்தகங்கள் செட் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடுமலை சர்தார் வீதியில் உள்ள நகராட்சி எக்ஸ்டன்சன் நடுநிலைப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த பாடப்புத்தகங்கள் தற்போது அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இவற்றை இந்த பள்ளியில் இருந்து, அந்தந்த பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் வந்து வாங்கி ஆட்டோ, கார், வேன் ஆகியவற்றில் தங்கள் பள்ளிக்கு கொண்டு செல்கின்றனர். அரசு உத்தரவு கிடைக்கப்பெற்றதும், கல்வித்துறை அதிகாரிகளின் அறிவுரைப்படி இந்த இலவச பாடப்புத்தகங்கள், அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story