கிராமப்புறங்களில் உள்ள உலர்க்களங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை


கிராமப்புறங்களில் உள்ள உலர்க்களங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 16 Jun 2021 9:45 PM IST (Updated: 16 Jun 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

கிராமப்புறங்களில் உள்ள உலர்க்களங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

போடிப்பட்டி
கிராமப்புறங்களில் உள்ள உலர்க்களங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயன்படுத்த முடியாத நிலை
உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் அதிக அளவில் மக்காச்சோளம், கம்பு, சோளம், ராகி உள்ளிட்ட தானியப் பயிர்கள் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த தானியங்களை விளைநிலங்களில் அறுவடை செய்த பிறகு சுத்தம் செய்து நன்கு உலர வைத்துதான் விற்பனை செய்ய முடியும். இதற்கென பெரும்பாலான கிராமங்களில் உலர்களங்கள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலும் அவை விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலையில் தான் உள்ளது. இதனால் தானியங்களை சாலைகளிலும், திறந்த வெளிகளிலும் காய வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பெரும்பாலான கிராமங்களில் ஊரை விட்டு ஒதுக்குப்புறமாகவே உலர்களங்கள் கட்டப்பட்டுள்ளது. அவை பெரும்பாலும் குடிமகன்களின் கூடாரமாகவே உள்ளது. இதனால் அவற்றைப் பயன்படுத்துவதில் விவசாயிகளுக்கு அச்சம் உள்ளது.
ஆக்கிரமிப்பு
சாளரப்பட்டி, கண்ணாடிப்புத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் உலர்களங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உலர் தீவனங்களை இருப்பு வைக்கவும், கால்நடைகளைக் கட்டி வைக்கவும், வாகனங்களை நிறுத்துமிடமாகவும் உலர்களங்களைப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் அவை சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் வேறு வழியில்லாமல் தானியங்களை சாலையில் காய வைக்கிறோம். இவ்வாறு காய வைக்கும் போது வாகனங்களாலும், பறவைகளாலும் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது. 
அத்துடன் சாலையில் காயவைப்பதால் விவசாயிகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடுமலை, மடத்துக்குளம் வட்டார கிராமங்களில் உள்ள உலர்களங்களை மீட்டெடுக்கவும் அவற்றைப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் கிராமப்புறங்களின் தேவையைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பான இடங்களைத் தேர்வு செய்து கூடுதல் உலர்களங்களைக் கட்டித்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

Next Story