தாராபுரம் டாஸ்மாக் கடை முன்பு தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்


தாராபுரம் டாஸ்மாக் கடை முன்பு தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 16 Jun 2021 10:05 PM IST (Updated: 16 Jun 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் டாஸ்மாக் கடை முன்பு தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரம்

தாராபுரம், 
தமிழகத்தில் கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருப்பூா் உள்பட 11 மாவட்டங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இதர 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதன்படி திருப்பூா் மாவட்டத்தின் அருகில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் திருப்பூா் மாவட்டத்தில்  டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் தாராபுரம், மூலனூா், குண்டடம் மற்றும் திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சோ்ந்த மதுபிாியா்கள் கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள கீரனூா், அப்பியம்பட்டி நால்ரோடு, அம்பிளிகை ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மது வாங்கி வருகின்றனா். 
இதனால் அங்குள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிாியா்கள் வாிசையில் நின்று மதுவாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் 2 மாவட்ட எல்லைகளில் போலீசாா் அதிரடி சோதனை நடத்தி ஏராளமான மதுபாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனா். இதனால் தாராபுரம் பகுதியை சோ்ந்த மதுப்பிாியா்கள் மிகுந்த வேதனையில் இருந்து வந்தனா். இந்த நிலையில் தாராபுரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 16 டாஸ்மாக் கடைகளில் தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக பணியாளா்கள் அந்தந்த டாஸ்மாக் கடைக்கு முன்பாக குழி தோண்டி கம்புகள் நட்டு தடுப்புகள் அமைத்து வருகின்றனா். வருகிற 21-ந்தேதிக்கு பின்னர் தாராபுரத்தில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் மதுப்பிரியர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர்.

Next Story