ஆற்காடு தாலுகாவில் வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து அதிகாரி ஆய்வு
ஆற்காடு தாலுகாவில் வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து அதிகாரி ஆய்வு
ஆற்காடு
ஆற்காடு தாலுகா திமிரி, காவனூர், பரதராமி, துர்க்கம், கரிவேடு ஆகிய கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வேண்டி மனு கொடுத்திருந்தனர். இந்தநிலையில் நேற்று வருவாய் கோட்ட அலுவலர் இளவரசி, ஆற்காடு தாசில்தார் காமாட்சி மற்றும் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது குறித்து மனு அளித்தவர்களிடம் விசாரணை செய்தனர். பின்னர் இலவச வீட்டுமனை பட்டா வழங்க உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்தனர்.
Related Tags :
Next Story