மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொண்டி,
டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டனம்
தொண்டி அருகே உள்ள எம்.வி. பட்டினத்தில் விசைப்படகு மீனவர்கள் சார்பில் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எம்.வி. பட்டினம் கிராமத் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். மோர்ப்பண்ணை விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் பதினெட்டாம் படியான் முன்னிலை வகித்தார்.
இதில் தமிழக கடலோர விசைப்படகு மீனவர்கள் சங்க வடக்கு மாவட்ட செயலாளர் கோபி, சிங்காரவேலர் நகர் விசைப்படகு சங்கத் தலைவர் சாமி சுந்தரம், கிராம நிர்வாகிகள் பிரபு ராஜீவ்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விசைப்படகுகளுக்கு வழங்கும் டீசலுக்கு மாநில அரசு ரூ. 15 வரியை குறைத்து வழங்குவது போல் மத்திய அரசும் வரியை குறைத்து உற்பத்தி விலைக்கே விசை படங்களுக்குடீசல் வழங்க வேண்டும். மத்திய-மாநில அரசுகள் இரால் கம்பெனிகளின் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி விசைப்படகு மீனவர்களுக்கு இறாலுக்கு உரிய விலையை பெற்றுத்தர வேண்டும்.
தடுமாற்றம்
சாலையை பயன்படுத்தாத விசைப்படகுகளுக்கு சாலை வரியை ரத்து செய்து டீசல் வழங்க வேண்டும். விசைப் படகுகளுக்கு பயன்படுத்தும் தளவாட பொருட்களின் விலை ஏற்றத்தால் மீனவர்களின் வாழ்வில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. படகுகளுக்கு வெளிநாடுகளில் வழங்குவதுபோல் உற்பத்தி விலைக்கே டீசல் வழங்க வேண்டும். பல ஆயிரம் பேருக்கு வாழ்வாதாரம் அளிக்கும் விசைப்படகுகளுக்கு வழங்கும் டீசலுக்கான வரியை மத்திய, மாநில அரசுகள் நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story