அரக்கோணம் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய 4 பேர் கைது
அரக்கோணம் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய 4 பேர் கைது
அரக்கோணம்
அரக்கோணத்தை அடுத்த கிருஷ்ணாபுரம் ஆற்றிலிருந்து மணல் திருடுவதாக அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் கிருஷ்ணாபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணாபுரம் ஆற்றுப்பகுதியில் இருந்து அந்த வழியாக வந்த மாட்டுவண்டிகளை தடுத்து நிறுத்தி பார்த்த போது மணல் கடத்தி வந்தது தெரிந்தது.
விசாரணையில் மணல் கடத்தி வந்தது கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மணி (வயது 60), ரவி (40), சிவலிங்கம் (62), தனஞ்செழியன் (57) என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story