விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்


விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Jun 2021 10:57 PM IST (Updated: 16 Jun 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

டீசல் விலை உயர்வை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோட்டைப்பட்டினம், ஜூன்.17-
கொரோனா பரவல் காரணமாக மீன்பிடி தடைக்காலம் முடிந்தும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. வருகிற 30-ந்தேதி முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதாக மீனவர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக மத்திய அரசு டீசல் விலையை உயர்த்தி வருகிறது. இதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசுக்கு  எதிராக கோஷம் எழுப்பினர்.

Next Story