மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு


மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு
x
தினத்தந்தி 16 Jun 2021 10:58 PM IST (Updated: 16 Jun 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு

கறம்பக்குடி, ஜூன்.17-
கறம்பக்குடி அருகே உள்ள சுக்கிரன் விடுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 32). இவர் நேற்று முன்தினம் கறம்பக்குடியிலிருந்து புதுக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். புதுப்பட்டி செட்டி ஊரணிகரை அருகே சென்றபோது எதிரே துவாரில் இருந்து மதுபாட்டில் வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த தஞ்சாவூர் மாவட்டம் ஓக்கநாடு கீழையூரைச் சேர்ந்த ராஜ்குமாரின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் பலியானார். படுகாயம் அடைந்த கார்த்திக் உள்பட 3 பேர் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கார்த்திக் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு இறந்தார். அவருக்கு திருமணமாகி 6 மாதங்களே  ஆகிறது. வெளி மாவட்டத்தில் இருந்து வந்து மது பாட்டில் வாங்கிச் சென்றவர் ஓட்டிய மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் இறந்த சம்பவம் கறம்பக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story