தண்ணீர் பிடிப்பதில் தகராறு; 3 பேர் மீது வழக்குப்பதிவு


தண்ணீர் பிடிப்பதில் தகராறு; 3 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 16 Jun 2021 11:08 PM IST (Updated: 16 Jun 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் பிடிப்பதில் தகராறு; 3 பேர் மீது வழக்குப்பதிவு

ஆவூர், ஜூன்.17-
விராலிமலை தாலுகா, வில்லாரோடை கிராமத்தை சேர்ந்தவர் பூபதி (வயது 40). இவரது மனைவி சரஸ்வதி (35). இவர்களது வீட்டின் அருகே குடியிருப்பவர் சரவணன் (38). இவரது மனைவி வேலுமணி (34).  நேற்று காலையில் வீட்டு அருகே உள்ள தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது, சரஸ்வதி, வேலுமணி ஆகியோர் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதனிடையே அங்கு வந்த சரவணன், அவரது தம்பி செல்வராஜ் (27), அதே ஊரை சேர்ந்த அலெக்சாண்டர் (25) ஆகிய 3 பேரும் சேர்ந்து பூபதியை தாக்கினர். இதில் காயமடைந்த பூபதி மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story