“ஊரடங்கிற்கு பின் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்” -சசிகலா
கொரோனா ஊரடங்கு முடிந்த உடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக மானாமதுரையைச் சேர்ந்த அ.தி.மு.க. மகளிரணி நிர்வாகியிடம் செல்போனில் சசிகலா தெரிவித்துள்ளார்.
மானாமதுரை,
ஜூன்.
கொரோனா ஊரடங்கு முடிந்த உடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக மானாமதுரையைச் சேர்ந்த அ.தி.மு.க. மகளிரணி நிர்வாகியிடம் செல்போனில் சசிகலா தெரிவித்துள்ளார்.
சசிகலா செல்போனில் ேபச்சு
மானாமதுரையைச் சேர்ந்த அ.தி.மு.க. மகளிரணி இணைச்செயலாளர் சண்முக பிரியாவிடம் நேற்று சசிகலா செல்போனில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.
அந்த உரையாடல் விவரம் வருமாறு:-
வணக்கம். நான் சசிகலா பேசுகிறேன். நல்லா இருக்கீங்களா. நானும் நல்லா இருக்கிறேன் என்று சசிகலா கூறுகிறார். அதற்கு சண்முகபிரியா, சசிகலாவிடம் நீங்கள் பொதுச்செயலாளராக வரவேண்டும் என்பதற்காக 4 வருடத்திற்கு முன்பே நான் மண் சோறு சாப்பிட்டு விட்டு போயஸ் கார்டன் வந்தேன். நாங்கள் வெளியே சொல்ல முடியாமல் இருந்து வருகிறோம் என்று கூறுகிறார்.
அதற்கு சசிகலா, நான் என்றைக்கும் தொண்டர்களை கண்ணீர் விடும் அளவிற்கோ அல்லது தத்தளிக்கும் அளவிற்கோ விடமாட்டேன் என்று கூறுகிறார். நிச்சயமாக நான் வருவேன் என்றும், ஊரடங்கு முடிந்தவுடன் அனைத்து இடங்களுக்கும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன் என்றும் சசிகலா அந்த உரையாடலில் கூறுகிறார்.
திருக்கோஷ்டியூர் கோவில்
மேலும் நான் திருக்கோஷ்டியூர் கோவிலுக்கு ஏற்கனவே வந்து சாமி தரிசனம் செய்துள்ளேன், ஊரடங்கு முடிந்தவுடன் மீண்டும் திருக்கோஷ்டியூர் கோவிலுக்கு வர உள்ளேன், ஒரு நியாயமாகவும், நல்லவிதமாகவும் கட்சியை கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் இப்போது உள்ளது. அந்த கட்டாயத்தை இப்போது ஏற்படுத்தி விட்டார்கள். அதனால் நான் வந்துவிடுவேன். கவலைப்படாதீர்கள் என்று சசிகலா பேசும் ஆடியோ 2 நிமிடங்கள் வரை செல்கிறது.
Related Tags :
Next Story