பள்ளிபாளையம் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு-அதிகாரிகள் ஆய்வு


பள்ளிபாளையம் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு-அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 17 Jun 2021 12:02 AM IST (Updated: 17 Jun 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிபாளையம்:
பள்ளிபாளையத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலங்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தள்ளிபூலக்காட்டூர், வெடியரசம்பாளையம், வண்ணாம்பாறை ஆகிய பகுதிகளில் உள்ளன. இந்த நிலங்களை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாகவும், வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளதாகவும் கூறி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்களை ஆய்வு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்பேரில் நேற்று கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆய்வு செய்ய குமாரபாளையம் தாசில்தார் தங்கம் மற்றும் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறையினர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது அங்கு கோவில் நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம், விசைத்தறி தொழில்கள் நடைபெற்று வந்ததும், சிலர் குடியிருப்புகளை கட்டி அதனை வாடகைக்கு விட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்து வருபவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்கான அறிக்கைகள் கோர்ட்டில் சமர்பிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story