திருமணமான 8 மாதத்தில் பெண் சாவு:தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது
ராசிபுரம் அருகே திருமணமான 8 மாதத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
ராசிபுரம்:
பெண் தற்கொலை
ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 40). ராசிபுரத்தில் சைக்கிள் ஸ்டாண்ட் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சத்யா (32). இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சத்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாய் வெண்ணிலா ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார்.
கணவர் கைது
அதன்பேரில் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருமணமாகி 8 மாதங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைகுமாரும் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் சத்யாவை அவரது கணவர் ராமச்சந்திரன் தற்கொலைக்கு தூண்டியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ராசிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story