ஊரடங்கை மீறிய 216 பேர் மீது வழக்குப்பதிவு
ஊரடங்கை மீறிய 216 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டார்.
கரூர்
கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சில தளர்வுகளுடன் வருகிற 20-ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில், முககவசம் அணியாமல் வெளியே வந்த சுமார் 129 பேர் வழக்குப்பதிந்து, அபராத தொகையாக ரூ.25 ஆயிரத்து 800-ம், பொது இடங்கள் மற்றும் கடைகள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததாக சுமார் 22 பேர் வழக்குப்பதிந்து, அபராதமாக ரூ.11 ஆயிரம் விதிக்கப்பட்டது.
மேலும் ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்கள் சுமார் 59 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டு, 97 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 216 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story