அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப்கார் வசதி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் அமைச்சர் பேட்டி
அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப்கார் வசதி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
குளித்தலை
குளித்தலை அருகே அய்யர்மலையில் பிரசித்தி பெற்ற ரெத்தினகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரோப்கார் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அய்யர்மலையில் 1,117 படிக்கட்டுகள் உள்ளதால் 2010-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால், இந்த மலைக்கு ரோப்கார் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் 2015-ம் ஆண்டு டெண்டர் போடப்பட்டு, 2017-ம் ஆண்டு டெண்டர் இறுதி செய்யப்பட்டு 18 மாத கால அளவிற்குள் பணிகளை முடிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ரோப்காரை விரைவில் அமைத்து பொதுமக்களுக்கு பயன்பாட்டிற்கு விட பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. குளித்தலையில் பஸ் நிலையம் அமைக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் தேவையான வசதிகள் செய்ய அனுமதி வழங்கப்படும் என்றார்.
இந்த ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கரூர் கலெக்டர் பிரபுசங்கர், குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர்கள் நாகராஜன் (திருப்பூர்), சுதர்சனம்(திருச்சி), உதவி ஆணையர்கள் சூரியநாராயணன், நந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story