60 சதவீத பட்டாசு ஆலைகள் இயங்கின
வெம்பக்கோட்டை பகுதியில் 60 சதவீதம் பட்டாசு ஆலைகள் இயங்கின.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை பகுதியில் 60 சதவீதம் பட்டாசு ஆலைகள் இயங்கின.
பட்டாசு ஆலைகள்
வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. கொரோனா தளர்வு காரணமாக தமிழக அரசு 33 சதவீத தொழிலாளர்களை பயன்படுத்தி பட்டாசு ஆலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.
நேற்று முதல் வெம்பக்கோட்டை பகுதியில் 60 சதவீத பட்டாசு ஆலைகள் மட்டும் செயல்பட தொடங்கின.
தயக்கம்
ஊரடங்கு முழுமையாக தளர்வு வழங்கப்படாததால் வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வர தயக்கம் காட்டுவதால் பட்டாசு ஆர்டர்கள் கிடைக்கவில்லை.
இதனால் தொழிலாளர்களுக்கு வார சம்பளம் கொடுக்க பணம் இல்லாததால் சில பட்டாசு ஆலைகள் பட்டாசு உற்பத்தி தொடங்காமல் உள்ளன.
மேலும் மூலப்பொருட்களின் விலை உயர்வினால் பட்டாசுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.
தொழிலாளர்கள்
குறைந்த அளவு தொழிலாளர் பயன்படுத்தினால் உற்பத்தி முழுமையடையாது.
மேலும் வேறு மாவட்டங்களில் இருந்து பட்டாசு ஆலைக்கு தொழிலாளர்களை வரவழைக்க இ-பதிவு முறை ரத்து செய்யப்படாதாதலும் சில பட்டாசுஆலை இன்னும் உற்பத்தியை தொடங்க வில்லை என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கூறினர்.
Related Tags :
Next Story