குளத்தில் மண் அள்ளிய 3 பேர் கைது


குளத்தில் மண் அள்ளிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 Jun 2021 12:59 AM IST (Updated: 17 Jun 2021 12:59 AM IST)
t-max-icont-min-icon

குளத்தில் மண் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

வடக்கன்குளம்:

பழவூர் அருகே சிதம்பராபுரம் கூத்தாண்டவர்குளத்தில் சிலர் அனுமதியின்றி மண் அள்ளியதாக பழவூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர்.

அப்போது, குளத்தில் ஊரல்வாய்மொழியைச் சேர்ந்த இசக்கியப்பன் (வயது 36), செட்டிகுளத்தை சேர்ந்த சதீஷ் (25), கீழ்குளத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (32) ஆகிய 3 பேர் 2 வேன்களில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தனர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story