கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு


கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 17 Jun 2021 1:51 AM IST (Updated: 17 Jun 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

உடையார்பாளையம்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் குறுவள மைய அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் உடையார்பாளையம் வடக்கு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் முதல் 3 முதல் இடங்களையும் பிடித்தனர். மாவட்ட கல்வி அலுவலர் ஆனந்தன் முதல் பரிசு பெற்ற திவ்யதர்ஷினிக்கு நுண்ணிய கைப்பேசி, இரண்டாம் பரிசு பெற்ற குரேஷுக்கு கைப்பேசி, மூன்றாம் பரிசு பெற்று தனுஷ்லாவிற்கு கணித கணக்கீடு செய்யும் கருவி ஆகியவற்றை பரிசாக வழங்கி பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் உடையார்பாளையம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன், வடக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிசுந்தர்ராஜ், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் ராமலிங்கம், வட்டார வளமைய பயிற்றுனர்கள் அற்புதசாமி, உத்திராபதி, தன்னார்வலர் ஜெயக்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story