மக்கள் நலனுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும் புதிய கலெக்டராக பொறுப்பேற்ற ரமண சரஸ்வதி பேட்டி


மக்கள் நலனுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும் புதிய கலெக்டராக பொறுப்பேற்ற ரமண சரஸ்வதி பேட்டி
x
தினத்தந்தி 17 Jun 2021 1:59 AM IST (Updated: 17 Jun 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் மக்கள் நலனுக்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று புதிய கலெக்டராக பொறுப்பேற்று கொண்ட பி.ரமண சரஸ்வதி தெரிவித்தார்

அரியலூர்
அரியலூர் மாவட்ட கலெக்டராக கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 13-ந் தேதி முதல் பணியாற்றி வந்த டி.ரத்னாவை சமூக நலன் இயக்குனராக பணியிட மாற்றம் செய்தும், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனராக பணிபுரிந்து வந்த பி.ரமண சரஸ்வதியை அரியலூர் மாவட்ட கலெக்டராகவும் நியமித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு உத்தரவிட்டது.
 அதன்படி அரியலூர் மாவட்ட கலெக்டராக ரமண சரஸ்வதி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் கலெக்டர் ரமண சரஸ்வதி நிருபர்களிடம் கூறுகையில் தொழில் நகரமான அரியலூர் மாவட்ட வளர்ச்சிக்காகவும், வேளாண்மை, கல்வி மற்றும் அடிப்படை வசதிகளான குடிநீர், இருப்பிடம், உள்கட்டமைப்பு, பொது சுகாதாரம், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி மக்கள் நலனுக்காகவும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளும் முன்னெடுத்து செயல்படுத்தப்படும். மேலும் அனைத்தும், அனைவருக்கும் தங்கு தடையின்றி சென்றடைய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
ரமண சரஸ்வதி ஏற்கனவே 1999-2000-ம் ஆண்டுகளில் துணை கலெக்டராகவும், 2003-07-ம் ஆண்டுகளில் தென்காசி வருவாய் கோட்டாட்சியராகவும், 2009-11-ம் ஆண்டுகளில் நெல்லை மாவட்ட வருவாய் அதிகாரியாகவும், 2012-17-ம் ஆண்டுகளில் உணவுப்பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இணை ஆணையராகவும், 2017-20-ம் ஆண்டுகளில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இணை இயக்குனராகவும், 2020-21-ம் ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனராகவும் பணியாற்றி, தற்போது அரியலூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் அனுஜார்ஜ், லட்சுமி பிரியா, விஜயலட்சுமி, ரத்னா ஆகிய 4 பெண் கலெக்டர்கள் பணி புரிந்துள்ளனர். தற்போது 5-வது பெண் கலெக்டராக ரமண சரஸ்வதி பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story