தீ விபத்தில் 5 பவுன் நகை-ரூ.1 லட்சம் எரிந்து நாசமாயின


தீ விபத்தில் 5 பவுன் நகை-ரூ.1 லட்சம் எரிந்து நாசமாயின
x
தினத்தந்தி 17 Jun 2021 3:09 AM IST (Updated: 17 Jun 2021 3:09 AM IST)
t-max-icont-min-icon

குன்னம் அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பவுன் நகை-ரூ.1 லட்சம் எரிந்து நாசமாயின

குன்னம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொட்டரை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 35). இவர் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் அரியலூர் மாவட்டம் ராயம்புரம் கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சிக்காக சென்று விட்டார். இந்தநிலையில் திடீரென குடிசை வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைக்கண்ட அப்பகுதியினர் தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றும் கட்டுப்படுத்த முடியவில்லை. காற்று பலமாக வீசியதால் அருகில் உள்ள வைக்கோல் போரிலும் தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீைர பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் உள்ள பீரோவில் ஆறுமுகம் வைத்திருந்த 5 பவுன் நகை மற்றும் வீடு கட்டுவதற்காக அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 500 ஆயிரம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி புத்தகம் மற்றும் துணிமணிகள் தீயில் எரிந்து நாசமாயின. மேலும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் போரும் சாம்பலானது. இதுகுறித்து மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்குப்பதிந்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story