சேலம் மாவட்டத்தில் புதிதாக 693 பேருக்கு கொரோனா- தொற்றுக்கு 18 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் புதிதாக 693 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் புதிதாக 693 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
693 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 759 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நேற்று புதிதாக 693 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் 189 பேர், எடப்பாடியில் 24 பேர், மகுடஞ்சாவடி 28 பேர், ஓமலூர் 31 பேர், சங்ககிரியில் 24 பேர், வீரபாண்டியில் 23 பேர், மேச்சேரியில் 10 பேர், தாரமங்கலத்தில் 16 பேர், வாழப்பாடியில் 17 பேர் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கிருஷ்ணகிரி, கடலூர், கோவை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலம் வந்தவர்கள் உள்பட மொத்தம் 693 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்த எண்ணிக்கை
இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 81 ஆயிரத்து 608 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 1,456 பேர் குணமடைந்துவிட்டதால் நேற்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதேசமயம் 6,003 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
18 பேர் பலி
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் அனைவரும் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 1,307 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story