பயணிகள் வருகை குறைந்ததால் சேலம் வழியாக செல்லும் 18 ரெயில்கள் ரத்து


பயணிகள் வருகை குறைந்ததால் சேலம் வழியாக செல்லும் 18 ரெயில்கள் ரத்து
x

பயணிகள் வருகை குறைந்ததால் சேலம் வழியாக செல்லும் 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சூரமங்கலம்:
பயணிகள் வருகை குறைந்ததால் சேலம் வழியாக செல்லும் 18 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தற்காலிகமாக ரத்து
கொரோனா ஊரடங்கு காரணமாக ரெயில்களில் பயணிகளின் வருகை குறைந்து வருவதால் பல ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சேலம் வழியாக செல்லும் 18 ரெயில்கள் பயணிகள் வருகை குறைவால் இன்று (வியாழக்கிழமை) முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை சென்டிரல்-ஈரோடு தினசரி சிறப்பு ரெயில் (வண்டி எண் 02649) இன்று முதல் ஜூலை 1-ந் தேதி வரையும், மறுமார்க்கத்தில் ஈரோடு-சென்னை சென்டிரல் சிறப்பு ரெயில் (வண்டி எண் 02650) வருகிற 30-ந் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகின்றன.
18 ரெயில்கள்
சென்னை சென்டிரல்-மதுரை வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 06019) நாளை (வெள்ளிக்கிழமை), 21, 23, 25, 28, 30 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில் மதுரை-சென்னை சென்டிரல் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 06020) இன்று, 20, 22, 24, 27, 29 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன.
சென்னை சென்டிரல்-ஆலப்புழா சிறப்பு ரெயில் (வண்டி எண் 02639), சென்னை சென்டிரல்-மேட்டுபாளையம் தினசரி சிறப்பு ரெயில் (வண்டி எண் 02671), சென்னை சென்டிரல்-திருவனந்தபுரம் தினசரி சிறப்பு ரெயில் (வண்டி 02695) ஆகியவை வருகிற 30-ந் தேதி வரையும், ஆலப்புழா-சென்னை சென்டிரல் தினசரி சிறப்பு ரெயில் (வண்டி எண் 02640), மேட்டுபாளையம்-சென்னை சென்டிரல் தினசரி சிறப்பு ரெயில் (02672) உள்பட 18 ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story