தம்மம்பட்டி அருகே டாஸ்மாக் கடை ஒதுக்குவதில் தகராறு: தி.மு.க. பிரமுகரை தாக்கிய 2 பேர் கைது


தம்மம்பட்டி அருகே டாஸ்மாக் கடை ஒதுக்குவதில் தகராறு: தி.மு.க. பிரமுகரை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 17 Jun 2021 3:42 AM IST (Updated: 17 Jun 2021 3:42 AM IST)
t-max-icont-min-icon

தம்மம்பட்டி அருகே டாஸ்மாக் கடை ஒதுக்குவதில் ஏற்பட்ட தகராறில் தி.மு.க. பிரமுகரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தம்மம்பட்டி:
தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் அகிலன் (வயது 46). கெங்கவல்லி ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளரான இவர், தனது கட்சியினருடன் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த 4 பேர் டாஸ்மாக் கடை ஒதுக்குவது தொடர்பாக அவரிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த 4 பேரும், அகிலனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தி.மு.க. பிரமுகரை தாக்கியது செந்தாரப்பட்டியை சேர்ந்த ராம்குமார் (32), தம்மம்பட்டியை சேர்ந்த பேபி (எ) சந்தோஷ் (32), காந்திநகரை சேர்ந்த வெங்கடேசன் (27), கொண்டையம்பள்ளியை சேர்ந்த செல்வக்குமார் (36) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதில் பேபி, செல்வகுமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.


Next Story