கெங்கவல்லி அருகே புளிய மரம் சாய்ந்து விவசாயி பலி- மோட்டார் சைக்கிளில் சென்ற போது பரிதாபம்


கெங்கவல்லி அருகே  புளிய மரம் சாய்ந்து விவசாயி பலி- மோட்டார் சைக்கிளில் சென்ற போது பரிதாபம்
x
தினத்தந்தி 17 Jun 2021 4:01 AM IST (Updated: 17 Jun 2021 4:01 AM IST)
t-max-icont-min-icon

கெங்கவல்லி அருகே புளிய மரம் சாய்ந்து விழுந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி பரிதாபமாக இறந்தார்.

கெங்கவல்லி:
கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பெரியசாமி மகன் சின்னசாமி (வயது23), விவசாயி. நேற்று இரவு 9 மணி அளவில்  வளையமாதேவியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தெடாவூர் பிரிவு சாலையில் சென்ற போது, சாலை ஓரத்தில் நின்ற புளியமரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதில் சின்னசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story