பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் பகுதியில் பாக்கெட்டுகளில் அடைத்து வீடு வீடாக சாராயம் விற்பனை
பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் பகுதியில் பாக்கெட்டுகளில் அடைத்து வீடு வீடாக சாராயம் விற்பனை நடைபெறுவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பெத்தநாயக்கன்பாளையம்:
சேலம் கருமந்துறை மலைப்பகுதியில் இருந்து தினமும் லாரிகளில் சாராயம் அடைக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது. அதனை சிறு சிறு பாக்கெட்டுகளாக தயார் செய்து பெத்தநாயக்கன்பாளையம் ஏத்தாப்பூர் கல்லேரிப்பட்டி, வைத்தியகவுண்டன்புதூர், பெத்தநாயக்கன்பாளையம், தும்பல், பனைமடல், இடையப்பட்டி ஆகிய பகுதிகளில் வீடு வீடாக விற்பனை செய்யப்படுகிறது. தேவைப்படும் நபர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்துக்கே கொண்டு வந்து கொடுக்கும் வகையில் அதாவது ‘டோர் டெலிவரி’ செய்யப்படுகிறது. அந்த பகுதியில் சாராய விற்பனை ஜோராக நடப்பதாக கூறப்படுகிறது. இது சமூக ஆர்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து சாராய விற்பனையை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story