கூடலூரில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி


கூடலூரில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 17 Jun 2021 5:38 AM IST (Updated: 17 Jun 2021 5:38 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தோகைமலை
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தோகைமலை வட்டார மருத்துவர் தியாகராஜன் அறிவுறுத்தலின் பேரில் தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கூடலூர் ஊராட்சி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முதியவர்கள், வாலிபர்கள் உள்பட பலர் ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அப்போது கொரோனா பரவலை தடுக்க அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

Next Story