ராயக்கோட்டையில் ஆம்னி வேன் திருடிய தொழிலாளி கைது


ராயக்கோட்டையில் ஆம்னி வேன் திருடிய தொழிலாளி கைது
x
தினத்தந்தி 17 Jun 2021 5:39 AM IST (Updated: 17 Jun 2021 5:39 AM IST)
t-max-icont-min-icon

ராயக்கோட்டையில் ஆம்னி வேன் திருடிய தொழிலாளி கைது

ராயக்கோட்டை:
பர்கூர் ஜெ.ஜெ.ரோடு பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 50). இவர் ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி ஆம்னி வேன் மூலம் ஜவுளி துணி வியாபாரம் செய்து வந்தார். அதே விடுதியில்  கள்ளக்குறிச்சி மாவட்டம் அந்தியூரை சேர்ந்த தையல் தொழிலாளி கோவிந்தராஜ் (42) என்பவரும் தங்கி இருந்தார். இதனால் 2 பேரும் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை விடுதியில் காமராஜ் தூங்கி கொண்டு இருந்த போது அவருக்கு தெரியாமல் ஆம்னி வேன் சாவியை எடுத்த கோவிந்தராஜ் ஆம்னி வேன் மற்றும் அதில் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள துணி ஆகியவற்றை திருடி சென்றார். இதையடுத்து கண் விழித்த காமராஜ் தன்னுடைய ஆம்னி வேன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் இதுகுறித்து ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில்  ராயக்கோட்டை சப்- இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் உடனடியாக தேடுதல் வேட்டை நடத்தி பிள்ளாரி அக்ரஹாரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டு இருந்த ஆம்னி வேனை மடக்கி பிடித்தனர். பின்னர் கோவிந்தராஜை கைது செய்ததுடன் ஆம்னி வேன் மற்றும் துணிகளை பறிமுதல் செய்தனர்.

Next Story