இ-பதிவு பெறாமல் பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம்


இ-பதிவு பெறாமல் பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 17 Jun 2021 5:39 AM IST (Updated: 17 Jun 2021 5:39 AM IST)
t-max-icont-min-icon

இ-பதிவு பெறாமல் பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம்

குன்னூர்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இ-பதிவு பெற்று ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றி செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் குன்னூர் பகுதியில் இ-பதிவு பெறாமல் ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக புகார் எழுந்தது. 

இந்த நிலையில் குன்னூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இ-பதிவு பெறாமல் பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோக்களை போலீசார் மறித்தனர். தொடர்ந்து டிரைவர்களுக்கு தலா ரூ.200 முதல் ரூ.300 வரை அபராதமாக விதிக்கப்பட்டது. தொடர்ந்து இதே செயலில் ஈடுபட்டால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.

Next Story