10.5 சதவீத இடஒதுக்கீட்டை நிறுத்தி வைக்க வேண்டும் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கோரிக்கை


10.5 சதவீத இடஒதுக்கீட்டை நிறுத்தி வைக்க வேண்டும் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கோரிக்கை
x
தினத்தந்தி 17 Jun 2021 4:54 PM IST (Updated: 17 Jun 2021 5:01 PM IST)
t-max-icont-min-icon

10.5 சதவீத இடஒதுக்கீட்டை நிறுத்தி வைக்க வேண்டும் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, சீர்மரபினர் நலச்சங்க தென்மண்டல தலைவர் ராமமூர்த்தி தலைமையில், மாநில பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் சிலர் வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் ஒரு மனு கொடுத்தனர். 
அந்த மனுவில், "அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது சட்ட வரம்புகளை மீறி அவசர அவசரமாக 10.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தது. அந்த சட்டத்துக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே, கோர்ட்டு தீர்ப்பு வரும் வரையில் இந்த இடஒதுக்கீடு சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, நிபுணர் குழு மூலம் இடஒதுக்கீட்டை முறைப்படுத்தி, சட்டத்தை முறைப்படி திருத்தம் செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக பழங்குடி சீர்மரபினர் (டி.என்.டி.) என்று சான்றிதழ் வழங்கியும், டி.என்.டி. வகுப்பினருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
 

Next Story