பூதலூர், திருவையாறு பகுதிகளில் 40 பேருக்கு கொரோனா


பூதலூர், திருவையாறு பகுதிகளில் 40 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 Jun 2021 5:30 PM IST (Updated: 17 Jun 2021 5:30 PM IST)
t-max-icont-min-icon

பூதலூர், திருவையாறு பகுதிகளில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருக்காட்டுப்பள்ளி, 

பூதலூர் ஒன்றியத்தில் நேற்று 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தொற்று பாதித்த பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன. திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் 33 பேருக்கும், மாரநேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 78 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதேபோல் திருவையாறு பேரூராட்சி மற்றும் ஒன்றிய பகுதிகளில் 23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தகவல் அறிந்த திருவையாறு தாசில்தார் நெடுஞ்செழியன் மற்றும் திருவையாறு ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா, நடுக்காவேரி அரசு மருத்துவமனை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம் உள்ளிட்ட அலுவலர்கள் சம்பந்தப்பட்ட தெருக்களுக்கும், கிராமங்களுக்கும் சென்று கிருமி நாசினி தெளித்தனர்.

Next Story