செய்யாறில் டாஸ்மாக் கடைமுன்பு குடிமகன்கள் கல்வீசி தாக்குதல்
செய்யாறில் புறவழிச்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு மதுபோதையில் குடிமகன்கள் கல்வீசி தாக்கிக்கொண்டனர். இதனால் வாகன ஓட்டிகள் பதறியடித்து ஓடினர்.
செய்யாறு
சாலைஓரத்தில் அமர்ந்து...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுனை ஒட்டியுள்ள புறவழிச்சாலையில் இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் மீண்டும் கடந்த 14-ந் தேதி முதல் இயங்கி வருகிறது. புறவழிச் சாலையில் இயங்கி வரும் மதுக்கடைக்கு பார் வசதி இல்லாத சூழ்நிலையில் மது பிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி கடையின் முன்பாக சாலை ஓரங்களில் அமர்ந்து மது குடிக்கின்றனர்.
மது போதை தலைக்கு ஏறியதும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மோதலாக மாறுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
கல்வீசி தாக்குதல்
நேற்று மது குடிக்க வந்த குடிமகன்கள், மது வாங்கி சாலையோரத்தில் குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இரு கும்பலுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது கற்களை வீசி மோதலில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை உருவானது. அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் பதறியடித்து ஓடினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் செய்யாறு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போக்குவரத்து நிறைந்த சாலையில் அடிக்கடி நடக்கும் இதுபோன்ற சம்பவத்தால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மதுக் கடையின் அருகில் சாலையோரம் அமர்ந்து மது அருந்துவதை தடுக்க நடவ’ிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுதுள்ளனர்.
Related Tags :
Next Story