வேளாண்மை பல்கலைக்கழக நூலகத்தில் காவிநிற உடையில் திருவள்ளுவர் படம்
வேளாண்மை பல்கலைக்கழக நூலகத்தில் காவிநிற உடையில் திருவள்ளுவர் படம்
வடவள்ளி
வேளாண்மை பல்கலைக்கழக நூலகத்தில் காவிநிற உடையில் திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டு இருந்தது சர்ச்சையானது. உடனே அந்த படம் அகற்றப்பட்டது.
வேளாண்மை பல்கலைக்கழகம்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அன்று முதல் கோவையில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது.
இதனால் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களும் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் ஒரு சில மாணவ, மாணவிகள் மட்டும் விடுதிகளில் தங்கி ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள், அங்கு உள்ள நூலகத்திற்கும் சென்று தங்களின் ஆராய்ச்சிக்கு தேவையான புத்தகங்களை எடுத்து படிப்பது வழக்கம்.
திருவள்ளுவர் புகைப்படம்
இந்த நிலையில் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் புத்தர், விவேகானந்தர், பாரதியார் ஆகியோரின் புகைப்பட மும், படிப்பு குறித்து அவர்களின் கருத்துகளும் எழுதப்பட்டு இருந்தது.
அதைத்தொடர்ந்து காவிநிற உடை அணிந்த திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டு இருந்தது. அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனதால் சர்ச்சை ஏற்பட்டது.
இதையடுத்து வேளாண்மை பல்கலைக்கழக நூலகத்தில் காவிநிற உடையில் இருந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பல்கலைக்கழக அதிகாரிகள் உடனடியாக அகற்றினர்.
அதற்கு பதிலாக வெள்ளை நிற ஆடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படம் வைக்கப்பட்டது.
புதிய படம் வைக்கப்பட்டது
இது குறித்து வேளாண்மை பல்கலைக்கழக நிர்வாக தரப்பில் கூறுகையில், இந்த புகைப்படம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் நூலகத்தில் உள்ளது. தற்போதைய நிர்வாகம் சார்பில் வைக்கப்பட வில்லை.
அந்த திருவள்ளுவர் புகைப்படம் தொடர்பாக சர்ச்சை எழுந்ததால் புதிதாக வெள்ளை நிற உடையில் திருவள்ளுவர் படம் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
Related Tags :
Next Story