கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
கோவை
கோவையில் கொரோனா தடுப்பு பணிகளை கலெக்டர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் ஆய்வு செய்தனர். அவர்கள், முன்கள பணியாளர்கள் மேலும் சிறப்பாக செயல்படுமாறு கேட்டுக் கொண்டனர்.
கொரோனா பரவல்
கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் கொரோனா தொற்று மிகவும் அதிகரித்து தினசரி 4 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து 2 ஆயிரத்துக்குள் வந்துள்ளது. ஆனாலும் இறப்பு விகிதம் இன்னும் குறையவில்லை.
இந்த நிலையில் புதிதாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் கோவையில் நேற்று பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.
ஒண்டிப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்கள பணியாளர்களுக்கான செயல்வீரர்கள் கூட்டத்தில் கலெக்டர் சமீரன் பேசியதாவது
முன்கள பணியாளர்கள்
முன்கள பணியாளர்கள் தங்கள் பணிகளை மேலும் சிறப்பாக செய்ய வேண்டும். சளி, காய்ச்சல் பரிசோதனை செய்யும்போது வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும்.
மேலும் முன் கள பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண் டும். முக கவசம் அணிந்து தங்களையும் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கோவை சஞ்சய்காந்தி நகரில் நடைபெற்ற தூய்மை பணியாளர்களுக் கான ஆலோசனை கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா கூறிய தாவது
தூய்மை பணியாளர்கள் நகரை தூய்மையாக வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். கோவை நகரம் தூய்மை யான நகரமாக மாற தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
மக்கும், குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து குப்பைகளை சேகரிக்க வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் முன்கள பணியாளர்கள் சிறப்பாக செயல்படுவதுடன் தங்கள் உடல் நலனையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு
பின்னர் கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் ஜல்லிகுழி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்தனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறதா? என்றும் கேட்டறிந்தனர்.
அப்போது அருகில் இருந்த வீட்டில் உள்ளவர்களிடம் சளி, காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.இதையடுத்து மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்படும் திட்ட பணிகளை கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் பார்வையிட்டனர்.
பின்னர் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் நடைபெற்றுவரும் மக்கும் குப்பை, மக்காத குப்பை திட்டபணிகள், குடிநீர் வாரியம் சார்பில் செயல்படுத்தப்படும் பணிகளையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.
அப்போது மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story