தேனி மாவட்டத்தில் 139 பேருக்கு கொரோனா


தேனி மாவட்டத்தில் 139 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 17 Jun 2021 8:44 PM IST (Updated: 17 Jun 2021 8:44 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் மேலும் 139 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தேனி :
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 139 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 41 ஆயிரத்து 354 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 227 பேர் நேற்று குணமாகினர். தற்போது இந்த வைரஸ் பாதிப்புடன் 1,486 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 70 பேர் செயற்கை ஆக்சிஜன் சுவாசம் உதவியுடனும், 54 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு நேற்று யாரும் பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story