மதுக்கடைகளை மூடக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


மதுக்கடைகளை மூடக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Jun 2021 9:29 PM IST (Updated: 17 Jun 2021 9:29 PM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே மதுக்கடைகளை மூடக்கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டச்சேரி:
நாகை மாவட்டம் திருமருகல் அருகே  அருண்மொழித்தேவன் கிராமத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற உறுப்பினர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார்.இதில் மாநில அமைப்பு துணைதலைவர் ராஜேந்திரன், மாநில இளைஞரணி துணைசெயலாளர் அரவிந்த், ஒன்றிய செயலாளர் அன்புகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதியழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மதுக்கடைகளை மூடக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
அதேபோல் அகரகொந்தகை, போலகம், ஏனங்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story