மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்தது
நாகூர் அருகே, சாராயம் கடத்தி வந்த போது ஏற்பட்ட விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்தது.இதில் சிறுவன் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
நாகூர்:
நாகூர் அருகே, சாராயம் கடத்தி வந்த போது ஏற்பட்ட விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்தது.இதில் சிறுவன் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்தது
நாகூர் அருகே கொட்டாரக்குடி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் செய்யதுமுகமது (வயது26). இவர் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் நரிமணம் கிராமத்தில் இருந்து கொட்டாரக்குடி சென்றார்.
நாகூர் கங்களாச்சேரி சாலையில் திரும்பியபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், செய்யது முகமது மோட்டார் சைக்கிள் மீது ேமாதியது. இதில் தூக்கி வீசப்பட்டு செய்யது முகமது படுகாயம் அடைந்தார். மேலும் 2 மோட்டார் சைக்கிள்களும் தீப்பிடித்து எரிந்தது.
2 பேர் காயம்
இதில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 16 வயது சிறுவன் தீக்காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செய்யதுமுகமது, தீக்காயம் அடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நாகை அருகே பெருங்கடம்பனூர் பகுதியை சேர்ந்த சிறுவன் காரைக்கால் மாவட்டம் வாஞ்சூரில் இருந்து சாராயம் கடத்தி வந்த போது செய்யதுமுகமது மோட்டார் சைக்கிள் மீது மோதியதும், விபத்தில் சாராயம் சிதறி விழுந்ததில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்ததும் தெரிய வந்தது. மேலும் தப்பியோடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story