திருப்பூரில் தடுப்பூசி போட நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
திருப்பூரில் தடுப்பூசி போட நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போட ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகள் முன்பு பலரும் குவிந்து வருகிறார்கள். சில இடங்களில் தடுப்பூசி போடுவதில் வாக்குவாதமும் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், கருவம்பாளையம் அரசு பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் மதியம் வரை தடுப்பூசி போடுவதற்கு நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து நின்றனர். அவர்களுக்கு டோக்கன் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுபோல் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story