ரத்தினகிரி அருகே மணல் கடத்திய 3 பேர் கைது; வேன் பறிமுதல்
ரத்தினகிரி அருகே மணல் கடத்திய 3 பேர் கைது; வேன் பறிமுதல்
ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தனகிரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பாலாற்று பகுதியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் ரத்தனகிரி போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்மின்னல் பாலாற்றில் இருந்து வந்த வேனை நிறுத்தினர். உடனே வேனை நிறுத்திவிட்டு, அதில் இருந்த 3 பேர் இறங்கி தப்பி ஓட முயற்சித்தனர்.
அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தத்தில் அவர்கள் ரத்தினகிரி அடுத்த கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் (வயது 27), அஜித்குமார் (23), கீழ்மின்னல் பகுதியைச் சேர்ந்த சூர்யா (23) என்பதும், பாலாற்றில் இருந்து வேனில் மணல் கடத்தியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மேலும் 3 பேரையும் கைது செய்த போலீசார், வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story